பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது

சென்னை: தமிழகத்தில் ஜனவரி 14ம் தேதி தைப்பொங்கல் பண்டிகை மிக கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு மக்களுக்கு அரசு சார்பில் பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கமான ஒன்றாகும்.

கடந்த ஆண்டு தி.மு.க அரசு மக்களுக்கு பொங்கல் பரிசாக 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கியது. ஆனால் மக்களுக்கு ரொக்க பணம் ஏதும் வழங்காததால் தமிழகத்தில் பெரும் சர்ச்சை நிலவியது.

இதனை அடுத்து 2023 ஆம் ஆண்டு வர உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு பதிலாக, 1,000 ரூபாயை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்க உள்ளதாகவும், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இத்தொகையை சேர்த்து வழங்க கூட்டுறவுத் துறை திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் பரவி கொண்டு வருகின்றது.

ஆனால் தற்போது வரை பொங்கல் பண்டிகைக்கு பரிசுத் தொகை வழங்கப்படுமா அல்லது பொங்கல் பரிசுத் தொகுப்பு அடங்கிய மளிகைப் பொருட்கள் வழங்கப்படுமா என்ற அறிவிப்பிற்கு பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.