புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 3 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் நீடிப்பதால் மிக கனமழை தொடர வாய்ப்பு உள்ளது. புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 34செ.மீ., பரங்கிப்பேட்டையில்26 செ.மீ., காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடியில் 25செ.மீ., பேச்சியார்தோப்பு 20செ.மீ., புவனகிரி 19செ.மீ., கொத்தவாச்சேரியில் 33செ.மீ., லால்பேட்டையில் 29செ.மீ. மழை பதிவானது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 22செ.மீ., குடவாசலில் 21செ.மீ., நன்னிலத்தில் 14செ.மீ., வலங்கைமானில் 13செ.மீ. மழை பதிவானது. மயிலாடுதுறை கொள்ளிடத்தில் 33செ.மீ., சீர்காழி 19செ.மீ., தரங்கம்பாடியில் 5செ.மீ. மழை பதிவானது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 20செ.மீ., தங்கச்சிமடத்தில் 8செ.மீ., பாம்பனில் 7செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கரூர் மாவட்டத்தில் பாலவிடுதி 5செ.மீ., மயிலம்பட்டி 4செ.மீ., கிருஷ்ணாபுரம், மாயனூர், அரவக்குறிச்சியில் தலா 2செ.மீ. மழை பதிவானது.

அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் 11செ.மீ., திருமானூர் 9.7செ.மீ., செந்துறை 9.5செ.மீ., அரியலூரில் 7.4செ.மீ. மழை பதிவானது. பெரம்பலூர், மன்னார்குடியில் தலா 10செ.மீ., உத்திரமேரூரில் 7செ.மீ., காஞ்சிபுரத்தில் 4செ.மீ., ஸ்ரீபெரும்புதூரில் 3செ.மீ. மழை பதிவானது. திருவள்ளூர் கண்ணன்கோட்டை, ஜீரோ பாயிண்ட்டில் தலா 11செ.மீ., சோழவரத்தில் 9செ.மீ., மழை பதிவாகி உள்ளது.