விவசாயிகளுக்கான மத்திய அரசின் உதவித்தொகை உயர்வா?

இந்தியா: பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 நிதி பலன் வழங்கப்பட்டு கொண்டு வருகிறது. தற்போது அது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தை செயற்படுத்தி கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கப்பட்டு கொண்டு வருகிறது.

இதையடுத்து இந்த தொகை இந்த பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு 6,000 ரூபாயிலிருந்து தொகையை உயர்த்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

இதை விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். தற்போது வரை இந்த திட்டத்தில் நிதிஉதவி பெற தகுதி பெற்ற பல விவசாயிகளுக்கு 12 மாத தவணை தொகை செலுத்தப்பட்டுவிட்டது. அடுத்த தவணை அதாவது 13-வது தவணை ஹோலிக்கு முன் வரவு வைக்கப்படும் என வெளியாகியுள்ளது.