தமிழகத்தில் தேர்வுக்கு பிறகு மின்தடை இருக்குமா?

சென்னை: தேர்வுக்கு பிறகு மின்தடை இருக்குமா? என கேள்வியும் பயனர்கள் மத்தியில் எழுந்துள்ளது ... தமிழகத்தில் தற்போது கோடை வெப்பம் பகல் நேரங்களில் கொளுத்தி கொண்டு வருகிறது. இந்த வெப்பத்தால் மக்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் மின் பயன்பாடு உயர்ந்துள்ளது. வழக்கமாக கோடை காலத்தில் மின் விநியோகம் தடை அதிக அளவில் செய்யப்படும்.

ஆனால் கடந்த மார்ச் முதல் தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் படிக்க ஏதுவாக மின்விநியோகம் தடை எந்த பகுதியில் செய்யப்படவில்லை.


அதனை தொடர்ந்து தற்போது 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக மின் விநியோகம் தடை மேற்கொள்ளப்படவில்லை. தற்காலிகமாக பராமரிப்பு பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு 24 மணி நேரமும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டுகொண்டு வருகிறது.

ஏதேனும் சில முக்கிய பணிகள் காரணமாக ஒரு சில இடங்களில் மட்டுமே சிறிது நேரம் மட்டுமே மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. தற்போது மின் விநியோகம் தடை செய்யப்படாததால் மின் விநியோகம் உயர்ந்துள்ளது. இதனை ஈடு செய்யும் வகையில் வரும் நாட்களில் அதாவது தேர்வு முடிந்த பிறகு மின்தடை செய்யப்படுமா? என மின் நுகர்வோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.