ராணி எலிசபெத் மரணம் ... உலக தலைவர்கள் இரங்கல்

இங்கிலாந்து : பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத்தின் 70 ஆண்டுகள் அரசாட்சி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நீண்டகால முடியாட்சியை நடத்தி வந்த ராணி இரண்டாம் எலிசபெத் இன்று (செப் 9) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

மகாராணி எலிசபெத்தின் உடல்நிலை கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி பாதிக்கப்பட்டது. இருந்த போதினும் தொடர்ந்து அவர் அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றார். அவர் நடக்க முடியாத சூழலில் கைத்தடி ஏந்தி நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மகாராணியின் உடல்நிலை மிகவும் மோசமானது. அதன் பின்னர் அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இருந்த போதிலும் அவருடைய வயது மூப்பு காரணமாக சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பால்மோர இல்லத்தில் காலமானார் என பக்கிங்ஹாம் அரண்மனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவிற்கு அந்நாட்டு பிரதமர் லிஸ் டிரஸ், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.