2ம் உலகப் போரின் வெடிகுண்டை நிபுணர்கள் செயலிழக்க செய்தனர்

கிரேட்யார் மவுத்: வெடிகுண்டை செயலிழக்க வைத்தனர்... கிரேட் யார்மவுத்தில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டை நிபுணர்கள் செயலிழக்க வைத்தனர்.

இந்த செயலிழப்பு பணியின் போது சுமார் 17:00 மணிக்கு திட்டமிடப்படாத வெடிகுண்டு வெடித்தபோது பல மைல்களுக்கு ஒரு பெரிய வெடிப்பு சத்தம் கேட்டதாக மக்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது பலத்த சத்தம் கேட்டதாகவும், 15 மைல் (24 கிமீ) தொலைவில் கட்டடங்கள் குலுங்கியதாகவும் சமூக ஊடகங்களில் மக்கள் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டு எரிவாயு குழாய்களுக்கு அருகில் வெடிகுண்டு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இந்த வெடிகுண்டை பாதுகாப்புபடுத்தி வைத்திருந்த இராணுவ வல்லுநர்கள் அதை பாதுகாப்பாக செயலிழக்க வைத்தனர்.

இராணுவத்தினர், அவசர சேவைகள் அல்லது பொதுமக்கள் மத்தியில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என நோர்போக் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, பெரும்பாலான வீதிகள் மீண்டும் திறக்கப்பட்டு, குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.