உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 5 லட்சத்து 91 ஆயிரம் பேர் உயிரிழப்பு

சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 91 ஆயிரத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் 1 கோடியே 39 லட்சத்து 37 ஆயிரத்து 253 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புடைய 50 லட்சத்து 76 ஆயிரத்து 643 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 59 ஆயிரத்து 935 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 82 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 லட்சத்து 91 ஆயிரத்து 957 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 1,41,117 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் 76,822 பேரும், இங்கிலாந்தில் 45,119 பேரும் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.