உலகளவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 70 லட்சத்தைக் கடந்தது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1.21 கோடியை தாண்டியுள்ளது.

மேலும் இதுவரை கொரோனா காரணமாக 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 70 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில், இந்தியா போன்ற நாடுகள் உள்ளன. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை தடுக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

தற்போது ரஷ்யாவில் கொரோனா தாக்கம் வேகமெடுத்துள்ளது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக 4-வது இடத்தில் ரஷ்யா உள்ளது. பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியும் கொரோனா தாக்கம் குறைந்தபாடில்லை.