ரூ.5 கட்டணத்தில் மெட்ரோ ரயில் பயணம் செய்யலாம்

சென்னை : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு வருகிற டிச.3ம் தேதி 5 ரூபாய் கட்டணத்தில் பயணம் செய்யலாம் என அறிவிப்பு ...சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து கொண்டு வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2011-ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, Chennai Metro Rail Limited (CMRL) என்று அழைக்கப்படும், சென்னை மெட்ரோ இரயில் லிட்., கட்டம் 1-ன் பணிகளை விரைவாக நடத்தி முடிக்க ஆணையிட்டார்கள். எனவே அதன்படி, மெட்ரோ இரயில் பணிகள் பற்றிய காலத்தில் நடைபெற்று வந்தது. அதன்பின்னர் அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு வருகிற டிசம்பர் 3ம் தேதி (ஞாயிறு) ஒரு நாள் மட்டும் ரூ.5 ரூபாய் கட்டணத்தில் பொதுமக்கள் பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூ.ஆர் ஆகிய பயணச்சீட்டு முறைக்கு இச்சலுகைக்கு பொருந்தாது. Static QR, Paytm, whatsapp Phonepe மூலம் பெரும் டிக்கெட்டுகளுக்கு மட்டும் இச்சலுகை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.