பைக்கில் முதியவரை கட்டி இழுத்துச்சென்ற வாலிபர் கைது

பெங்களூர்: முதியவரின் கைகளை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பெங்களூரு, மாகடி சாலையில் இரு சக்கர வாகனத்தில் ஒரு நபரை கைகளை கட்டி பின்னால் இழுத்துச் செல்லப்பட்டார். பின்னால் வந்த ஒருவர் இதைப் பார்த்ததும், உடனடியாக அந்த இரு சக்கர வாகனத்தை மடக்கி நிறுத்தி அந்த இளைஞரை பிடித்தார்.

இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்டவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த இளைஞரை கைது செய்தனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.