பொருளாதார நெருக்கடியால் வேலை தேடி வெளிநாடு பறக்கும் இளைஞர்கள்

இலங்கை: வெளியேறும் இளைஞர்கள்... இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

குறிப்பாக கட்டுமாண துறையில் சிமெண்ட், கம்பி மற்றும் இதர பொருட்களின் விலையேற்றம் காரணமாக பலரின் வேலை இழக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல இளைஞர்கள் தொழில்வாய்ப்புதேடி மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

இதன்படி இந்த வருடத்தில் இதுவரை 221,023 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் நாட்டிலிருந்து மூன்று இலட்சம் பேரை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதே வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இலக்கு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.