புர்ஹி டிஹிங் நதியின் சுற்றுலா அம்சங்கள்

புர்ஹி டிஹிங் நதி வடக்கு அஸ்ஸாம் பகுதியில் அமைந்துள்ள பிரம்மபுத்திரா நதியின் ஒரு கிளைபகுதி ஆகும். இது மிக நீண்ட பரப்பளவில், அதிக தொலைவு வரை ஓடும் ஒரு கிளை நதியாகும். அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உருவாகும் இந்த நதி மிக உயரமான இடத்திலிருந்து ஓடத் துவங்குகிறது. கடல் மட்டத்திலிருந்து 2375 மீட்டர் உயரத்திலிருந்து அதாவது 7792 அடி உயரத்தில் இருந்து பாய்கிறது.

தின்சுகியா மற்றும் திப்ருகர் மாவட்டங்களில் இந்த புர்ஹி டிஹிங் நதி 6000 சதுர கிமீ பரப்பளவை ஆக்கிரமித்துக்கொண்டு ஓடுகிறது. இந்த நதி செல்லும் பாதைகளிலெல்லாம் சில பல ஏரிகளை உருவாக்கிச் செல்கிறது. இவை அனைத்தும் நல்ல இயற்கை காட்சியை நமக்கு விருந்தாக அளிக்கின்றன.

இந்த நதி ஜெய்பூர் - திஹிங் மழைக்காடுகள், பல பெட்ரோலியம் வயல்கள், ஈரநிலங்கள், மூங்கில் காடுகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் என செல்லும் இடமெல்லாம் அழகிய வளங்களை உருவாக்கி, நம்மையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

பிக்னிக் செல்ல புர்ஹி திஹிங் சிறந்த ஒரு இடம். இது இப்போது நீங்கள் இருக்கும் உலகத்தை விட்டு வேறு ஒரு உலகத்துக்கு செல்வது போன்ற ஒரு பிரம்மிப்பை ஏற்படுத்தும். இந்தியாவின் எல்லா பகுதி மக்களும் செல்லச் சிறந்த ஒரு இடம் என்றால் அது புர்ஹி திஹிங் நதி தான்.