Advertisement

கருகருவென்று முடி வளர இன்ஸ்டன்ட் ஷாம்பு இதோ

By: vaithegi Sun, 19 Nov 2023 3:58:28 PM

கருகருவென்று முடி வளர இன்ஸ்டன்ட் ஷாம்பு இதோ

முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் எளிமையான முறையில் அதே நேரத்தில் உடனடியான தீர்வான ஒரு அருமையான இன்ஸ்டன்ட் ஷாம்பு எப்படி தயாரிப்பது என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

தயாரிக்கும் முறை :இதற்கு முதலில் 2 டீஸ்பூன் டீத்தூளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி இந்த டீத்தூளை சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். இதற்கு எந்த வகையான டீத்தூளை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். டீ தூள் நன்றாக கொதித்து அதன் சாறு முழுவதும் தண்ணீரில் இறங்க வேண்டும். அதன் பிறகு அதை ஒரு வடிகட்டி கொண்டு தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

instant shampoo,hair ,இன்ஸ்டன்ட் ஷாம்பு ,முடி


இப்போது ஒரு மிக்ஸர் ஜாரில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை எடுத்து கொள்ளுங்கள். மேலும் இத்துடன் 4 ஒற்றை இதழ் செம்பருத்தி பூ எடுத்துக் கொள்ளுங்கள். இதன் காம்பு மகரந்தம் இரண்டையும் எடுத்து விட்டு இதழ்களை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல் 10 செம்பருத்தி இலை இதுவும் ஒற்றை செம்பருத்தி இலையாக இருக்க வேண்டும். அதன் பிறகு 4 பாதாம் பருப்பு. இதில் பாதாம் பருப்பு சேர்க்கும் போது முடி நல்ல ஷைனிங்காக பட்டு போல இருக்கும்.

அதன் பிறகு வாசத்திற்காக ஒரு பன்னீர் ரோஜாவின் இதழ்களை சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் 1 கைப்பிடி அளவு மருதாணி இலைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த இலைகளை சேர்ப்பதன் மூலம் இளநரை பிரச்சனை சரியாகும். புதிதாக இலை நரைகள் வருவது தடுக்கப்படும். இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் ஒன்றாக சேர்த்த பிறகு நாம் ஏற்கனவே கொதிக்க வைத்து வடிகட்டிய தண்ணீரை இதில் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பேக்கை தலைக்கு குளிப்பதற்கு பத்து நிமிடம் முன்பாக தலையில் நன்றாக தேய்த்து ஊற விடுங்கள். அதன் பிறகு நீங்கள் எப்போதும் போல தலைக்கு குடிக்கலாம். இந்த சமயத்தில் ஷாம்பு கண்டிஷன் எதுவும் போடவே தேவையில்லை இதுவே போதும். இம்முறையை வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை கூட செய்யலாம். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த ஷாம்புவை பயன்படுத்துவதனால் முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கி முடி நன்றாக வளரும்.

Tags :