- வீடு›
- பொழுதுபோக்கு›
- அன்னபூரணி முதல் நாள் வசூல்
அன்னபூரணி முதல் நாள் வசூல்
By: vaithegi Sat, 02 Dec 2023 2:55:22 PM
உலகம் முழுவதும் மொத்தமாக 1.5 கோடிகளுக்கு மேல் வசூல் .....நடிகை நயன்தாரா நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான “அன்னபூரணி” திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று கொண்டு வருகிறது. இதையடுத்து இந்த படத்தை அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளள்ளார். படத்தை எஸ்.எஸ்.ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரித்துள்ளளார்கள்.
இந்த படத்தில் நடிகை நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். ராஜா ராணி படத்திற்கு பிறகு நயன்தாரா ஜெய், சத்யராஜ், கூட்டணி இணைந்துள்ளதாலே இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது என்றே சொல்லலாம்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா சமையல் செய்யும் பெண்ணாக நடித்து இருக்கிறார். பெரிதும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அதன் படி, இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மொத்தமாக 1.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இத்திரைப்படம் 14 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம். இருந்தாலும், விமர்சனம் படத்திற்கு எப்படி கிடைத்தாலும் வசூல் ரீதியாக நல்ல ஓப்பனிங் கிடைத்து உள்ள காரணத்தாலும் வரும் நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதாலும் படத்தின் வசூல் நாளுக்கு நாள் உயர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.