- வீடு›
- பொழுதுபோக்கு›
- இனிமேல், அந்த மாதிரி ஒப்பந்தம் செய்யபோவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளாராம் அஜித்
இனிமேல், அந்த மாதிரி ஒப்பந்தம் செய்யபோவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளாராம் அஜித்
By: vaithegi Thu, 30 Nov 2023 10:06:52 AM
அஜித் குமார் தனது 62வது படமான ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர்து அடுத்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார் என்ற தகவல் சமீபத்தில் தான் வெளியானது. இதையடுத்து தற்போது, இந்த படம் குறித்த கூடுதல் தகவல் என்னவென்றால், பிறபல முன்னணி தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் ‘ஏகே 63’ படத்தை தயாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பதிலாக தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கவுள்ளதாக நேற்றைய தினம் கிசுகிசுக்கப்பட்டது.
மேலும் இதில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஒளிப்பதிவாளராக நீரவ் ஷாவும் இணைந்து உள்ளார்கள் என்றெல்லாம் பேச்சுக்கள் அடிப்பட்டது. இதனால் சற்று குழப்பம் ஏற்பட்டது. ஆனால், வதந்திகளுக்கு அஜித் தரப்பு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குகிறார். தெலுங்கு இயக்குனர் இயக்கவில்லை என்று சினிமா செய்தி தகவல் வழங்கும் வலைப்பேச்சு உறுதி செய்து உள்ளது.
பொதுவாக, தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்கிறது என்றால், அங்கிருந்தே இயக்குனரையும் தேர்வு செய்கின்றனர். அதுபோன்று, இப்படத்திலும் அவ்வாறு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சரி எது என்னவோ, இதுகுறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக காத்திருப்போம்.
முந்தைய காலங்களில் அஜித் குமார் ஒரு திரைப்படம் நடிக்கிறார் என்றால், அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு தொடர்ந்து 3 படங்களில் நடிப்பதாக ஒப்பந்தம் செய்து விடுவாராம். இனிமேல், அந்த மாதிரி ஒப்பந்தம் செய்யபோவதில்லை என்ற அதிரடி முடிவை எடுத்து உள்ளார். ஆம், அந்த தகவலின்படி, இனிமேல் 1 தயாரிப்பு நிறுவனத்திற்கு 1 படம் மட்டுமே நடிப்பதாக ஒப்பந்தம் செய்ய இருப்பதாக முடிவு செய்து உள்ளராம்.