Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • லியோவை இயக்கியதற்காக இவ்வளவு சம்பளம் வாங்கினாராம் இயக்குனர் லோகேஷ்

லியோவை இயக்கியதற்காக இவ்வளவு சம்பளம் வாங்கினாராம் இயக்குனர் லோகேஷ்

By: vaithegi Thu, 30 Nov 2023 10:44:20 AM

லியோவை இயக்கியதற்காக இவ்வளவு சம்பளம் வாங்கினாராம் இயக்குனர் லோகேஷ்


விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் பெரும் விமர்சனத்தை பெற்றது.

இதையடுத்து வசூல் ரீதியாக படம் உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 2-வது பாகமும் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் எழுந்துள்ளது. இதன் இடையில், படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்ற விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.

எனவே அதன்படி, லியோ படத்தை இயக்கியதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சம்பளமாக 22 கோடி வாங்கி இருக்கிறாராம். அவருக்கு சம்பளமாக பேசப்பட்டு இருந்தது 20 கோடி தானாம் ஆனால், சம்பளமாக அவருக்கு 22 கோடி கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.

salary,leo,director lokesh ,சம்பளம் ,லியோ,இயக்குனர் லோகேஷ்


மேலும், ஏற்கனவே லியோ படத்தை இயக்கியதற்கு சம்பள விஷயத்தில் தயாரிப்பு நிறுவனம் பாக்கி வைத்ததாகவும், இதனால் லோகேஷ் கனகராஜ் மிகவும் அப்செட்டில் இருக்கிறார் என்ற தகவலும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வைரலாகி பரவி வந்த நிலையில் அதற்கு மிகவும் வருத்தத்தில் லோகேஷ் கனகராஜ் இருக்கிறாராம்.

ஏனென்றால், படம் வெளியாவதற்கு முன்பே சம்பளம் லோகேஷ் கனகராஜ் கொடுக்கப்பட்டு விட்டதாம். எனவே, தனக்கு சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டாச்சு வதந்தி தகவலை பரப்ப வேண்டாம் என்று லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags :
|
|