Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரி மற்றும் காரைக்காலில் புயல் காரணமாக டிசம்பர் 4ம் தேதி பள்ளிகளுக்கு கல்வித்துறை விடுமுறை

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் புயல் காரணமாக டிசம்பர் 4ம் தேதி பள்ளிகளுக்கு கல்வித்துறை விடுமுறை

By: vaithegi Sat, 02 Dec 2023 4:12:34 PM

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் புயல் காரணமாக டிசம்பர் 4ம் தேதி பள்ளிகளுக்கு கல்வித்துறை விடுமுறை


புதுச்சேரி: திங்கட்கிழமை (டிச.04) பள்ளிகளுக்கு விடுமுறை ....தென் கிழக்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுப்பெற்றுள்ளது.

இதையடுத்து தற்போது நிலவரப்படி இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் கிழக்கே சுமார் 510 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 3ம் தேதி வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

department of education,puducherry,karaikal ,கல்வித்துறை ,புதுச்சேரி ,காரைக்கால்


அதன் பிறகு டிசம்பர் 5ஆம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வரும் டிசம்பர் 4ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :