Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டாஸ்மாக்கில் CCTV கேமரா பொருத்துவதற்கான டெண்டர் பணி கூறப்பட்டுள்ளதாக தகவல்

டாஸ்மாக்கில் CCTV கேமரா பொருத்துவதற்கான டெண்டர் பணி கூறப்பட்டுள்ளதாக தகவல்

By: vaithegi Sat, 02 Dec 2023 3:53:18 PM

டாஸ்மாக்கில் CCTV கேமரா பொருத்துவதற்கான டெண்டர் பணி கூறப்பட்டுள்ளதாக தகவல்

சென்னை: தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று ஒரு புறம் கோரிக்கை வலுத்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதையடுத்து தற்போது மோசடி, கொள்ளை சம்பவம், கள்ளச்சாராயம் விற்பனை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இதனை தடுக்கும் நோக்கில் அனைத்து கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்று அரசு அறிவித்தது.

tender work,cctv,tasmac ,டெண்டர் பணி ,CCTV ,டாஸ்மாக்

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஒரு டாஸ்மாக் கடைக்கு 2 கேமராக்கள் வீதம் தமிழகம் முழுவதும் உள்ள 3000 கடைகளில் சுமார் 6000 கேமராக்கள் பொருத்துவதற்கு அரசு அனுமதி அளித்தது. எனவே அதன் அடிப்படையில் டாஸ்மாக் கடைகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டது.

அதை தொடர்ச்சியாக மேலும் 500 கடைகளுக்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்து உள்ளது.


Tags :
|