Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இனி முதல்வர் பதவியில் 50% இவர்களுக்கு தான் இட ஒதுக்கீடு வழங்கப்படும் ..ராகுல் காந்தி உறுதி

இனி முதல்வர் பதவியில் 50% இவர்களுக்கு தான் இட ஒதுக்கீடு வழங்கப்படும் ..ராகுல் காந்தி உறுதி

By: vaithegi Sat, 02 Dec 2023 4:08:52 PM

இனி முதல்வர் பதவியில் 50% இவர்களுக்கு தான் இட ஒதுக்கீடு வழங்கப்படும் ..ராகுல் காந்தி உறுதி

இந்தியா: இந்தியாவில் நடப்பு ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி தற்போது ஆட்சி அமைத்துவுள்ளது. இதையடுத்து அதன் தொடர்ச்சியாக பிற மாநிலங்களிலும் வெற்றி பெற தேவையான பணியை முழு வீச்சில் செய்து கொண்டு வருகிறது.

அண்மையில் சத்தீஸ்கரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் கருத்து கணிப்பில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கும் என கூறப்படுகிறது.

rahul gandhi,reservation ,ராகுல் காந்தி ,இட ஒதுக்கீடு

இந்நிலையில் கேரளாவில் நடைபெற்ற மாநில மகளிர் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, தற்போது காங்கிரஸ் கட்சியில் பெண்கள் யாரும் முதல்வராக இல்லை. ஆனால் முதல்வராக தகுதியுடைய பெண்கள் நமது கட்சியில் உள்ளனர்.

முதல்வர் பதவியில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு அளிக்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் பதவி இருப்பவர்களில் பாதி பேர் பெண்களாக இருப்பார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.


Tags :