- வீடு›
- விளையாட்டு›
- விராட்கோலி CSK அணிக்கு மாற ரசிகர்கள் கோரிக்கை
விராட்கோலி CSK அணிக்கு மாற ரசிகர்கள் கோரிக்கை
By: vaithegi Sun, 26 Nov 2023 4:22:41 PM
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது 2024 ஐபிஎல் தொடருக்கானபெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அந்த வகையில், வருகிற டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் ஐபிஎல் ஏலம் நடைபெற இருக்கும் நிலையில் என்னென்ன மாற்றங்கள் நடைபெற இருக்கிறதோ என்று ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும், அடுத்த ஆண்டில் ஐபிஎல் தொடர் எப்போது தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பிற்காகவும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், ஐபிஎல் மினி ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக இன்று ரிட்டன்ஷன் செய்யப்படும் கிரிக்கெட் வீரர்களின் லிஸ்ட் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் 2 வீரர்களை விடுவிக்க தயாராக இருக்கிறது. இந்த நிலையில், விராட் கோலி பெங்களூர் அணியிலிருந்து வெளியேறி சென்னை அணிக்கு மாற வேண்டும் எனவும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.