Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • உலகக் கோப்பை கால்பந்து தொடர் தகுதி சுற்றில் இந்தியா அணி தோல்வி

உலகக் கோப்பை கால்பந்து தொடர் தகுதி சுற்றில் இந்தியா அணி தோல்வி

By: Nagaraj Wed, 22 Nov 2023 2:55:05 PM

உலகக் கோப்பை கால்பந்து தொடர் தகுதி சுற்றில் இந்தியா அணி தோல்வி

புவனேஸ்வர்: உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2026ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணியுடன் நடந்த 2வது ஆட்டத்தில் கத்தார் அணி வெற்றி பெற்றுள்ளது.

ஆண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2026ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது. அதற்கான ஆசிய மண்டல தகுதி சுற்றின் 2-வது சுற்றில் 36 அணிகள் பங்கேற்று உள்ளன. அவை 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா 2 முறை லீக்கில் மோதுகின்றன.

இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 3-வது சுற்றுக்கு முன்னேறும். 2-வது சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்றன. இந்தியா 'ஏ' பிரிவில் கத்தார், குவைத் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.

qatar team india team soccer match 2nd round win ,கத்தார் அணி, இந்திய அணி, கால்பந்தாட்டம், 2வது சுற்று, வெற்றி

இதில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி குவைத் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் பலம் வாய்ந்த கத்தார் அணியுடன் மோதியது .ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் கத்தார் அணியின் டெரெக் மெஷல் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் கத்தார் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் 47வது நிமிடத்தில் கத்தார் அணியின் அல்மோஸ் அலி, 86வது நிமிடத்தில் யூசுப் அப்தரிசாக் கோல் அடித்தனர்.

இந்த ஆட்டத்தில் போராடியும் இந்திய அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 3-0 என கத்தார் அணி வெற்றி பெற்றது.

Tags :