Advertisement

  • வீடு
  • சுற்றுலா
  • வெகு வேகமாக நடக்கும் பணிகள்... சமுத்திரம் ஏரி சுற்றுலாத்தலமாகிறது

வெகு வேகமாக நடக்கும் பணிகள்... சமுத்திரம் ஏரி சுற்றுலாத்தலமாகிறது

By: Nagaraj Fri, 11 Aug 2023 6:28:09 PM

வெகு வேகமாக நடக்கும் பணிகள்... சமுத்திரம் ஏரி சுற்றுலாத்தலமாகிறது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே சமுத்திரம் ஏரி பகுதியில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

தஞ்சாவூர் என்றாலே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர் தான். சுற்றுலாப்பயணிகளின் முக்கிய தேர்வாக தஞ்சாவூர் பட்டியலில் இடம் பிடிக்கும். காரணம். உலகப் புகழ் பெற்ற பெரிய கோயில், தஞ்சை அரண்மனை, சங்கீத மஹால் நூலகம், சிவகங்கை பூங்கா, பீரங்கி மேடு, ராஜ ராஜ சோழன் மணி மண்டபம் என்று ஏராளமான வரலாற்று சிறப்புகள் தஞ்சாவூரில் அடங்கி உள்ளது.

அந்த வகையில் தஞ்சாவூருக்கு பெருமை சேர்க்கும் மற்றொரு விஷயம் சமுத்திரம் ஏரி. தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ளது இந்த சமுத்திரம் ஏரி. மிகவும் பழமையான இந்த ஏரி 287 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி மூலம் சுமார் 1,186 ஏக்கர் பரப்பளவு சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஏரி நாயக்கர் காலத்தில் வெட்டப்பட்டது. பின்னர் வந்த மராட்டியர்களின் ஆட்சிக்காலத்தில் ஏரி புனரமைக்கப்பட்டது. இந்த ஏரி குறித்த ஓவியம் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் இடம் பெற்றுள்ளது.

samudram lake,pudupolivu,peoples happiness,utility,renovation ,சமுத்திரம் ஏரி, புதுப்பொலிவு, மக்கள் மகிழ்ச்சி, பயன்பாடு, சீரமைப்பு

இதனை பார்க்கும் போது தஞ்சை நகரில் தொடங்கி மாரியம்மன்கோவில் வரை பரந்து விரிந்து இருந்தது. இந்த ஏரிக்கு கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் வரும்.

இந்த ஏரி குறித்த ஓவியம் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த ஏரி ஆக்கிரமிப்பு மற்றும் குப்பைகளால் மாசுப்பட்டு கிடந்தது. மிகவும் புகழ்பெற்ற மாரியம்மன் கோயிலுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள், சுற்றுலாப்பயணிகள் இந்த ஏரியின் அவலத்தால் முகம் சுளிக்கும் நிலை இருந்து வந்தது. இதையடுத்து இந்த ஏரியை சுற்றுலாதலமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து கல்லணை கால்வாய் கோட்ட பொதுப்பணித்துறை சார்பில் இதுதொடர்பாக விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டது. ரூ.9 கோடி மதிப்பீட்டில் இதற்காக திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏரியை தூர்வாரி ஆழப்படுத்துவதோடு கரைகளும் பலப்படுத்தப்பட்டன.

இங்கு படகுசவாரி, சிறுவர் பூங்கா, பொழுதுபோக்கு மீன்பிடி தளம், பறவைகள் வந்து தங்கும் வகையில் 3 தீவுகள், குடிநீர், கழிவறை வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் போன்றவையும் ஏற்படுத்தப்படுகிறது. தற்போது சமுத்திரம் ஏரி பகுதியில் நடைபாதைகள் அமைக்கப்பட்டு மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் விளையாடுவதற்காக சறுக்கு மரம் ஊஞ்சல் போன்ற விளையாட்டு சாதனை பொருட்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விரைவில் இந்த சமுத்திரம் ஏரி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்கிரமிப்புகளால் சூழ்ந்து காணப்பட்ட இந்த சமுத்திரம் ஏரி தற்போது புதுப்பொலிவு பெற்று வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags :