Advertisement

  • வீடு
  • சுற்றுலா
  • பட்ஜெட்டுக்குள் எந்த வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லலாம்!!!

பட்ஜெட்டுக்குள் எந்த வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லலாம்!!!

By: Nagaraj Mon, 21 Aug 2023 6:43:39 PM

பட்ஜெட்டுக்குள் எந்த வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லலாம்!!!

சென்னை: இந்தியர்கள் நம்ம பட்ஜெட்டுக்குள் செல்லக் கூடிய வெளிநாடுகளின் லிஸ்ட் இது. நாடுகளின் பெயரைக் கேட்கும் போது, இது எல்லாமே சுற்றுலாவுக்கு செமத்தியான இடமாச்சேன்னு நெனைப்பீங்க. ஆனா, இந்த நாடுகளுக்கு செல்ல ஆகுற செலவை யோசிச்சா சில நாடுகளுக்கு நாம காஷ்மீருக்கு சென்று மூன்று நாட்கள் தங்கியிருந்து சுற்றிப் பார்ப்பதை விட செலவு குறைவாகவே ஆகும்.

உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் சுற்றுலா செல்வதை வழக்கமாக விரும்புவர். அதில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா என்பது சிலருக்கும் மட்டும் கிட்டும் வாய்ப்பு. பலருக்கு அது கனவு மட்டுமே. இந்நிலையில் வெளிநாடுகளுக்கு குறைந்த செலவில் சுற்றுலா செய்யலாம் அதிலும் குறிப்பாக ஒரு நாடு இல்லாமல் சுமார் 10 நாடுகளுக்கு குறைந்த செலவில் நாம் பயணம் மேற்கொள்ளலாம்.

அவை, ஐஸ்லாந்து, தென் கொரியா, கொலம்பியா, பராகுவே, வியட்நாம், இந்தோனேசியா, கம்போடியா, லாவோஸ், ஸ்ரீலங்கா, நேபாள் உள்ளிட்ட நாடுகள் ஆகும். இதில் உலகின் அழகான நாடுகளின் ஒன்றான ஐஸ்லாந்தில் பனிப்பாறைகளால் சூழப்பட்ட எரிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பனிக் குகைகள், கருங்கடற்கரை, தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் வைரக் கடற்கரை மற்றும் சில்லிடும் நீர்வீழ்ச்சிகள் ஆகியவற்றின் அழகில் திளைக்கலாம்.
இதேபோல் உலகின் அதிகப்படியான செலவு வீதத்தைக் கொண்ட நாடுகளில் தென் கொரியா இங்கு 4 பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு அனுபவங்களை ஏற்படுத்துகின்றது

travel,flight,budget,sri lanka,vietnam,nepal ,பயணம், விமானம், பட்ஜெட், இலங்கை, வியட்நாம், நேபாள்

மேலும், தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் கலாச்சார தொன்மம் என்பது மிக ஆழமானதாகும். அதன் வெப்பமண்டல காலநிலை, அழகான கடற்கரைகள், வெப்பமண்டல காடுகள் வாழ்நாளில் நிச்சயம் பார்த்து விட வேண்டியவை. கலையுடன் கூடிய பரபரப்பான நகரங்களுக்குப் பெயர் பெற்றது கொலம்பியா.

இதேபோல் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளங்களுக்கு சற்றும் குறைச்சல் இல்லாத இயற்கை அழகுடனும், எழில்மிகு நகரங்களும், பாரம்பரிய சின்னங்களுடனும் பராகுவே திகழ்கிறது. அதன் பெருமிதம் மிகுந்த சுற்றுலாத் தளங்கள் குறித்து பெரும்பாலும் இன்னும் பதிவு செய்யப்படாமலே இருப்பது சற்று கவனிக்க வேண்டிய விஷயம் தான்.

இதே போல் தென் கிழக்கு ஆசிய நாடான கம்போடியா, உங்களுக்கு மிகக் குறைந்த செலவில் சிறந்த சுற்றுலா அனுபவத்தை வழங்கும் பிரமாதமான ஒரு நாடாகும். உலகின் மிகப்பெரிய கோவிலான அங்கோர்வாட் கோவில், கி.பி 944ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கோ-கெர் என்னும் புத்த மடாலயம், உலகின் மிகவும் புராதானாமான நகரங்களின் ஒன்றாக விளங்கும் ஃப்ரோ ஃபென் நகரம் ஆகியவை தவற விடக் கூடாத கம்போடியா சுற்றுலாத் தளங்களாகும்.

நமது அண்டை நாடான இலங்கையின் தலைநகரமாக விளங்கிய அனுராதபுரமும், அதனை சுற்றியுள்ள எழில் கொஞ்சும் பூங்காக்களும் முக்கியமான சுற்றுலாப் பகுதியாகும். மேலும், இந்தியா - சீனா இடையே உள்ள நேபாளத்திற்கு பயணம் செய்வது ஒரு தனித்துவமான, சாகச அனுபவமாக இருக்கும். விமானம் வழியாக செல்வதற்குப் பதிலாக, சாலைப் பயணத்தை மேற்கொள்வது சிறந்த தேர்வாகும்.

Tags :
|
|
|