Advertisement

பொடுகு பிரச்சனையை எளிய முறையில் போக்கும் ஆப்பிள் சீடர் வினிகர்!

By: Monisha Fri, 23 Oct 2020 10:56:44 AM

பொடுகு பிரச்சனையை எளிய முறையில் போக்கும் ஆப்பிள் சீடர் வினிகர்!

எவ்வளவு தான் தலைமுடியை சுத்தமாக வைத்திருந்தாலும் சிலருக்கு பொடுகு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கும். அப்படிப்பட்ட இந்த பிரச்னையை எளிய முறையில் எப்படி போக்குவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்
ஆப்பிள் சீடர் வினிகர் அல்லது ஆப்பிள்
ஆரஞ்சு சாறு அல்லது எலுமிச்சை சாறு

செய்முறை
ஆப்பிள் சீடர் வினிகர் பொடுகை போக்க உதவுகிறது. அது உங்களிடம் இல்லையென்றால் ஆப்பிள் எடுத்து கொள்ளுங்கள். இதிலும் பூஞ்சை எதிர்ப்பு குணங்கள் உள்ளது.

hair,dandruff problem,apple cider vinegar,beauty,orange ,தலைமுடி,பொடுகு பிரச்சனை,ஆப்பிள் சீடர் வினிகர்,அழகு,ஆரஞ்சு

ஆப்பிளை தோல் எடுத்து அதனை நன்கு மசித்து கொள்ளுங்கள். பின்பு அதில் ஆரஞ்சு சாறு அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல் நன்கு குழைத்து அதனை உச்சந்தலை மற்றும் தலை முழுவதும் நன்கு தேய்த்து கொள்ளுங்கள். அதன்பின் அரைமணி நேரம் அப்படியே தலையை ஊற விடுங்கள். ஊறிய பின்னர் கூந்தலை குளிர்ந்த நீரில் நன்கு அலசி எடுத்துக்கொள்ளுங்கள். ஆப்பிளில் இருக்கும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் இருக்கும் கிருமிகளை அழிப்பதால் பொடுகு நீங்குகிறது.

குறிப்பு: உங்கள் தலையில் இருக்கும் பொடுகின் அளவை பொறுத்து வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனை செய்யுங்கள்.

Tags :
|
|