Advertisement

ஐஸ் கட்டி மசாஜ் செய்வதால் கிடைக்கும் அழகு நன்மைகள்!

By: Monisha Tue, 13 Oct 2020 5:04:01 PM

ஐஸ் கட்டி மசாஜ் செய்வதால் கிடைக்கும் அழகு நன்மைகள்!

ஐஸ் கட்டி கொண்டு மசாஜ் செய்வதால் முக கருமை மட்டுமல்லாமல் மேலும் பல நன்மைகளை பெறலாம். அவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிலருக்கு அதிகமாக முகம் வியர்க்கும். இதனால் போட கூடிய மேக்கப் சிறிது நேரத்திலே கலைந்து விடும். இதை தவிர்க்க மேக்கப் போடுவதற்கு முன்னதாக ஐஸ் க்யூபைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்யுங்கள். அப்படி செய்வதால் மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்கும்.

முகப் பருவை போக்க ஐஸ் கட்டி, மிகவும் சிறந்தது. இது முகப்பரு ஏற்படுத்தும் வலியையும், முகப்பரு சிவந்து போவதையும், வீக்கமடைவதையும் தடுக்கும். மேலும் முகப்பருவால் ஏற்படும் காயங்களையும் குணமாக்கும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒரு சுத்தமான காகிதத் துண்டில் ஐஸ் கட்டியை வைத்துபருவின் மீது வைக்க வேண்டும். ஏனென்றால் பருக்களில் பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும்

சிறிதளவு காய்ச்சாத பாலை ஃபிரீஸரில் வைத்து விட்டு வெளியே சென்று விட்டு வந்த பிறகு முகத்தைக் கழுவிய பின்னர், இந்த ஐஸ் கட்டியால் முகத்தை ஸ்க்ரப் செய்தால், இறந்த செல்கள் நீங்கி ஃபேஷியல் செய்ததுபோல பளபளப்பாக மாறும்.

சருமத்தில் அதிக எண்ணெய்ப் பசையுள்ளவர்கள் ஐஸ் க்யூபை கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து வர எண்ணெய் சுரப்பது குறையும். மேலும் சருமத்தில் வேறு எந்த பாதிப்புகளும் ஏற்படாமல் நாம் பாதுக்காக்க முடியும்.

ice pack,massage,face,beauty,shine ,ஐஸ் கட்டி,மசாஜ்,முகம்,அழகு,பளபளப்பு

ஒரு நாள் முழுவதும் வெயிலில் சென்று விட்டு வீட்டில் வரும் போது முகம் ஒருவழி ஆகி விடும். இதற்கு ஐஸ் க்யூப் பயன்படுத்தினாலே போதும். நீங்கள் பயன்படுத்திய அந்த நேரமே முகம் பொலிவு பெறும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஐஸ் க்யூப்பை எடுத்து முகத்தில் வட்டவடிவமாக தடவ வேண்டும். இப்படி செய்து வரும் போது இவை சருமத்துளைகளில் உள்ள அழுக்களை நீங்கி முகத்தை பொலிவு படுத்தும்.

வெப்பத்தினால் சருமம் கருப்பாகும். சிலருக்கு முகத்தில் அரிப்பு , அலர்ஜி போன்ற பிரச்னைகள் உருவாகும். இதற்கு ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்தால் அரிப்பு ஏற்படாமல் இருக்கும். மேலும் அலர்ஜி பரவாமல் தடுக்கலாம்.

சிலருக்கு முகத்தில், கழுத்துப் பகுதியில், கண்களின் ஓரத்தில், நெற்றியில் என பல இடங்களில் சுருக்கங்கள் இருக்கும். இதனை தடுக்க ஐஸ் க்யூப் கொண்டு மசாஜ் செய்தால் போதும். தினமும் இப்படிச் செய்து வந்தால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

கண்கள் மிகவும் சோர்வாகவோ அல்லது வீங்கியிருந்தால் இரவு நேரத்தில் சிறிதளவு கிரீன் டீயை ஊற்றி, ஃப்ரீஸரில் வைத்து மறுநாள் காலையில் கிரீன் டீயால் ஆன ஐஸ் கட்டிகளை எடுத்து, கண்களில் ஒத்தடம் கொடுத்தால் வீக்கம் குறைந்து கண்கள் அழகாகப் பிரகாசிக்கும்.

Tags :
|
|