Advertisement

முகம் பொலிவுடன் இருக்க கொத்தமல்லி தழை ஃபேஷ் பேக்!

By: Monisha Tue, 22 Sept 2020 4:50:09 PM

முகம் பொலிவுடன் இருக்க கொத்தமல்லி தழை ஃபேஷ் பேக்!

முகம் மற்றும் சருமப் பாதுகாப்பு குறித்து நாளுக்குநாள் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. பலவகையான பழங்களையும், மூலிகைகளையும் ஃபேஸ் பேக்காக பயன்படுத்தி வருகின்றனர். இப்போது, கொத்தமல்லி தழையிலும் ஃபேஷ் பேக் தயாரிக்கலாம்.

புதிய கொத்தமல்லி இலையை நன்றாக பசை போல அரைத்து அதனுடன் கற்றாழைச்சாறு சேர்த்து தோல் மீது போட்டு வர தோலில் ஏற்படும் சுருக்கம், தோலில் உண்டாகும் தழும்பு குணமாகும்.கொத்தமல்லி இலையுடன் எலுமிச்சைபழச்சாறு விட்டு நன்றாக பசைபோல் அரைத்து இதை முகத்தில் உண்டாகும் கரும்புள்ளி, பருக்கள் இவைகளின் மீது தினந்தோறும் போட்டுவர அவைகள் மறையும்.

கொத்தமல்லி இலையை பால் விட்டு நன்றாக பசைப்போல் அரைத்து அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் எலுமிச்சைபழச்சாறு சேர்த்து முகத்தில் தடவி வர முகப்பொலிவுடன் இருக்கும் மேனி பொலிவாகும்.

face,glowing,coriander,face pack ,முகம்,பொலிவு,கொத்தமல்லி,ஃபேஷ் பேக்

கொத்தமல்லி இலையுடன் பாலாடைக்கட்டி சேர்த்து அதில் அரிசி மாவு தேவையான அளவு கலந்து நன்றாக அரைத்து ஒன்றுச்சேர்த்து பசையை முகத்தில் தடவி வர முகத்தில் உண்டாகும் கரும்புள்ளிகள், மங்கு, முகத்தில் உண்டாகும் சிறுசிறு துளைகள் ஆகியவை மறையும்.

கொத்தமல்லி இலையுடன் தக்காளிச்சாறு, எலுமிச்சை பழச்சாறு, முல்தானிமட்டி பவுடர் இவைகளை ஒன்று சேர்த்து பசையாக்கி முகத்தில் அல்லது கை கால்களில் தேய்த்து 15 நிமிடம் கழித்து கழுவிக்கொள்ள முகம் மற்றும் தோல் பொலிவுடன் இருக்கும்.

கொத்தமல்லி இலையுடன் முட்டையின் வெள்ளை கரு மற்றும் ஓட்ஸ்பவுடர் சேர்த்து பசையாக்கி முகத்தில் தடவி வர முகச்சுரசுரப்பு, முகத்தில் உண்டாகும் கரும்புள்ளிகள் மறையும்.

Tags :
|