Advertisement

முகத்தில் கரும்புள்ளிகளால் கவலையா... உப்பு இருக்கா; தீர்வாகுமே!!!

By: Nagaraj Fri, 15 May 2020 11:39:41 AM

முகத்தில் கரும்புள்ளிகளால் கவலையா... உப்பு இருக்கா; தீர்வாகுமே!!!

கரும்புள்ளிகளால் வேதனையா... பெண்களுக்கு முகம் தன்னம்பிக்கையின் சாட்சி. சில பெண்களுக்கு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளால் சருமம் பொலிவிழந்து காணப்படும். அவர்கள் உப்பை பயன்படுத்தி கரும்புள்ளிகளை நீக்க முடியும் என்று ஒரு ஆய்வு கூறியுள்ளது.

மேசைக்கரண்டி உப்பை ரோஸ் வோட்டர் சேர்த்து கலந்து, இதனை கொண்டு முகத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

salt,black spot,face,seaweed,milk ,உப்பு, கரும்புள்ளி, முகம், கடலைமாவு, பால்

மேசைக்கரண்டி உப்பு மற்றும் சர்க்கரையை கலந்து, ஈரமான முகத்தில் அவற்றைக் கொண்டு மென்மையாக மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து, ஈரமான காட்டன் கொண்டு துடைத்து எடுத்து, பின் மாஸ்சுரைசர் தடவவும். இப்படி செய்வதால், கரும்புள்ளிகள் அதிகமாவதை தடுக்கலாம்.

ஒரு மேசைக்கரண்டி தேனில், 2 மேசைக்கரண்டி கல் உப்பு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலனைக் காணலாம்.

salt,black spot,face,seaweed,milk ,உப்பு, கரும்புள்ளி, முகம், கடலைமாவு, பால்

ஒரு பாத்திரத்தில் ஒரு மேசைக்கரண்டி கடலை மாவு, 2 மேசைக்கரண்டி பால் மற்றும் 1 மேசைக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் நன்கு உலர வைத்து, பின் தேய்த்து கழுவ, கரும்புள்ளிகள் நீங்கும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

Tags :
|
|