Advertisement

சருமத்தின் நிறத்தை அதிகரிக்க ஆரஞ்சு ஃபேஸ் பேக் செய்வது எப்படி?

By: Monisha Sat, 05 Dec 2020 11:08:39 AM

சருமத்தின் நிறத்தை அதிகரிக்க ஆரஞ்சு ஃபேஸ் பேக் செய்வது எப்படி?

ஆரஞ்சு பழம் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவி புரியும். மேலும் சருமத்தின் இளமையைப் பாதுகாப்பதோடு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, இறந்த செல்களை வெளியேற்றி, சருமத்தை பொலிவோடு பளிச்சென்று வெளிக்காட்டும். இந்த பதிவில் ஆரஞ்சு பழத்தைக் கொண்டு ஃபேஸ் பேக் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

* ஆரஞ்சு பழச்சாற்றினை சிறிது எடுத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து, அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமமானது பொலிவோடு இருக்கும்.

* மைதாவில் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமம் மென்மையாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

skin,face,beauty,face pack,orange fruit ,சருமம்,முகம்,அழகு,ஃபேஸ் பேக்,ஆரஞ்சு பழம்

* 2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு பழச்சாற்றில், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் பருக்கள் மட்டுமின்றி, பருக்களால் ஏற்பட்ட தழும்புகளும் மறையும்.

* 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 1 டீஸ்பூன் பால் பவுடர் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

* ஆரஞ்சு தோலை நன்கு உலர வைத்து பொடி செய்து, பின் அதில் ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது சந்தன பொடி சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் பருக்கள் இருந்தாலும் போய்விடும்.

Tags :
|
|
|