Advertisement

சருமத்தில் ஏற்படும் பாக்டீரியாவை தடுப்பது எப்படி?

By: Monisha Thu, 30 July 2020 5:10:49 PM

சருமத்தில் ஏற்படும் பாக்டீரியாவை தடுப்பது எப்படி?

முக பாக்டீரியாவை தடுப்பதற்கு பலவகை ஆண்ட்டி பயோட்டிக் மாத்திரை இருந்தாலும் கூட முக சருமத்தில் ஏற்படக்கூடிய கோளவுரு பாக்டீரியாவை (Staphylococcus) முகமுடி (face mask) கொண்டு தடுக்கலாம் என்று ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கோளவுரு (Staphylococcus) பாக்டீரியாவானது வட்ட வடிவில் தோல் பகுதிகளில் ஏற்படக்கூடியதாகும். மேலும் இது கால்நடைகளிலும் வரக்கூடும். இந்த கிருமியானது அனைத்து வகையான பாலூட்டிகளுக்கும் வரக்குடிய நுண்கிருமியாகும்.

skin,bacteria,facial,collagen bacteria,face ,சருமம்,பாக்டீரியா,முகமுடி,கோளவுரு பாக்டீரியா,முகம்

இந்த பாக்டீரிவானது மூக்கு, வாய், பிறப்புறுப்பு, கால் விரல் மற்றும் அடிப்பட்ட தோல் காயம் அல்லது அறுவை சிகிச்சையில் ஏற்படக்கூடிய காயம் ஆகிய இடங்களில் வரக்கூடிய ஒன்றாகும். பெரும்பாலாக இந்த கிருமி முகத்தில் ஏற்படும்.

இதை எளிதாக தடுப்பதற்காக நாம் சருமத்தை பாதுகாப்பதற்காக அன்றாடம் பயன்படுத்தும் ஏதேனும் ஒரு முகமுடியை பயன்படுத்தி அந்த கிருமியை தடுக்கலாம்.

இதனை 101 பன்றிகள் பண்னை வைத்திருப்பவர் வீட்டில் உள்ள 79 பேர்களிடம் தொடர்ந்து 4 மாதக்காலம் ஏதேனும் ஒரு முகமுடியைப் பயன்படுத்த வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் 50-70% சதவிகிதத்தில் கோளவுரு பாக்டீரியாவை குறைக்க முடியும் என்று தகவல் வெளியிட்டுள்ளது.

Tags :
|
|