Advertisement

எண்ணெய் வழியும் சருமத்தை சரி செய்வது எப்படி?

By: Monisha Thu, 22 Oct 2020 10:46:52 AM

எண்ணெய் வழியும் சருமத்தை சரி செய்வது எப்படி?

பலர் சந்திக்கும் அழகு சார்ந்த பிரச்சனைகளில் ஒன்று எண்ணெய் வழியும் முகம். எண்ணெய் பசை உள்ள சருமம் உள்ளவர்கள் நிச்சயமாக சரும பராமரிப்பைத் மேற்கொள்ள வேண்டியது அவசியம். அப்பொழுது தான் சருமத்தில் பரு ஏற்படுவதைத் தடுக்க முடியும். இதனை எப்படி சரி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

முகத்தில் அதிகம் எண்ணெய் வடிந்தால் முதலில் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். இதனால் முகத்தில் எண்ணெய் பசை குறைந்து முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும், முகத்தில் சோப்பு போட்டு கழுவுவதற்கு பதில் கடலை மாவு போட்டு கழுவினால் முகம் எண்ணெய் பசை விலகி பளபளப்பாக இருக்கும். மேலும் இரவில் தூங்கும் போது முகம் கழுவி விட்டு தான் தூங்க வேண்டும்.

முகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை குறையும். தக்காளியை நன்றாக சாறு பிழிந்து அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து முகத்தை கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பளிச்சென மாறும்.

oily skin,face,beauty,moisturizer,cucumber ,எண்ணெய் சருமம்,முகம்,அழகு,மாய்ஸ்சரை,வெள்ளரிகாய்

முகத்தில் அதிகம் எண்ணெய் வடிந்தால் சருமத்தில் வெடிப்பு ஏற்படும். எனவே, வாரத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக முகத்தை ஸ்க்ரப் உபயோகித்து சுத்தம் செய்தே ஆக வேண்டும். உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஸ்க்ரப்பை தேர்வு செய்து முகத்தைக் கழுவி முகத்தில் சேர்ந்துள்ள இறந்த சரும செல்களை நீக்க வேண்டும்.

முகத்தில் எண்ணெய் வடிந்தால் முதலில் நாம் உபயோகிக்கும் மாய்ஸ்சரை தான் கவனிக்க வேண்டும். எண்ணெய் இல்லாத மாய்ஸ்சரை தேர்ந்தெடுப்பதே மிக சிறந்த முறையாகும்.

காலை எழுந்ததும் வெள்ளரிகாயை சிறிது சிறிதாக வெட்டி முகத்தில் தேய்த்து வர எண்ணெய் பசை விலகி முகம் பொலிவு பெரும்.

Tags :
|
|