Advertisement

சரும அழகை வெண்ணெயை பயன்படுத்துவது எப்படி?

By: Monisha Wed, 21 Oct 2020 12:40:35 PM

சரும அழகை வெண்ணெயை பயன்படுத்துவது எப்படி?

சாப்பிட கூடிய வெண்ணெயில் அழகை கொடுக்க கூடிய பல குணங்கள் நிறைந்துள்ளன. சரும அழகை பெறுவதற்கு இந்த வெண்ணெயை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சரும ஆரோக்கியம் மேம்படும்
வெண்ணெய் பயன்படுத்துவதற்க்கு முன் சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை ரோஸ் வாட்டர் பயன்படுத்தி நீக்க வேண்டும். பின் ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டருடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பசைபோல் நன்றாக குழைத்து முகத்தில் பூச வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.

சருமம் பொலிவு பெறும்
ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறும் சேர்த்து குழைத்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 10 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவி வர சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.

skin,beauty,butter,cucumber,face ,சருமம்,அழகு, வெண்ணெய்,வெள்ளரிக்காய்,முகம்

முகம் பளபளப்பாக மின்னும்
வாழைப்பழத்துடன் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். வெண்ணையை உருக்கியோ அல்லது திட நிலையிலோ பயன்படுத்தலாம். பின்பு பிரஸ் மூலம் முகத்தில் மென்மையாக தடவ வேண்டும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மின்னும்.

சுருக்கங்கள் மறையும்
பால் மற்றும் வெண்ணெய் இரண்டையும் சமஅளவு எடுத்துகொண்டு, சிறிதளவு வெள்ளரிச்சாறை கலக்கவும். கழுத்து, முகம், நெற்றி என மசாஜ் செய்தால், அந்தப் பகுதிகளில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி, சருமம் இறுக்கமாக மாறும்.

வெண்ணெய் மசாஜ்
சிறிதளவு வெண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் முகம் வெண்ணெய் போலவே மிருதுவாக மாறும். உங்களுக்கு பிரகாசமான முகம் கிடைப்பதும் உறுதி.

Tags :
|
|
|