Advertisement

இயற்கை முறையில் தொடை மற்றும் பிட்டப் பகுதியை வெண்மையாக்குவது எப்படி?

By: Monisha Thu, 17 Dec 2020 11:31:06 AM

இயற்கை முறையில் தொடை மற்றும் பிட்டப் பகுதியை வெண்மையாக்குவது எப்படி?

பல பெண்களுக்கு பிட்டம் மற்றும் தொடைப்பகுதி கருப்பாகவும், அசிங்கமாகவும் காணப்படும். இதனால் நீச்சல் உடை அணிய கூச்சப்படுவார்கள். இப்படி தொடை மற்றும் பிட்டப்பகுதி கருமையாவதற்கு நாம் அணியும் பேண்டுகள் மட்டுமின்றி, பல்வேறு காரணங்களும் உள்ளன. இந்த பதிவில் இயற்கை வழியில் கருமையாக இருக்கும் தொடை மற்றும் பிட்டப் பகுதியை வெண்மையாக்குவது எப்படி என்று பார்ப்போம்.

பிட்டம் மற்றும் தொடைப்பகுதியில் உள்ள கருமையைப் போக்க அரிசி மாவு பெரிதும் உதவிப் புரியும். ஏனெனில் இதில் சருமத்தை வெள்ளையாக்கும் பண்புகள் ஏராளமாக உள்ளதால், இது எளிதில் தொடை மற்றும் பிட்டப் பகுதியில் உள்ள கருமையைப் போக்கலாம். ஒரு பௌலில் அரிசி மாவு மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை கருமையாக உள்ள தொடை மற்றும் பிட்டப் பகுதியில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, சில நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.

natural,buttocks,thighs,rice flour,orange peel ,இயற்கை,பிட்டம்,தொடைப்பகுதி,அரிசி மாவு,ஆரஞ்சு பழ தோல்

வெள்ளைக் கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை, சருமத்தில் இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளின் தேக்கத்தால் ஏற்பட்ட கருமைப் படலத்தை நீக்கும். மேலும் இது சருமத்தின் மென்மைத்தன்மையை அதிகரிக்கும். எனவே இதன் உதவியாலும் தொடை மற்றும் பிட்டப்பகுதியில் இருக்கும் கருமையை எளிதில் போக்கலாம். ஒரு பௌலில் சர்க்கரை மற்றும் தேனை ஒன்றாக கலந்து, கருமையாக இருக்கும் பகுதியில் தடவி மென்மையாக சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 10-15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.

சிட்ரஸ் வகையைச் சேர்ந்த ஆரஞ்சு பழத்தின் தோலில் ஏராளமான அழகு நன்மைகள் அடங்கியுள்ளது. குறிப்பாக ஆரஞ்சு பழத்தின் தோலில் தான் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. எனவே இனிமேல் ஆரஞ்சு பழத்தின் தோலை தூக்கி எறியாமல் உலர்த்தி பொடி செய்து, அதைக் கொண்டு சரும கருமையைப் போக்கி வெள்ளையாகுங்கள். ஒரு பௌலில் ஆரஞ்சு தோல் பொடி மற்றும் ரோஸ் வாட்டர் ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, கருமையாக உள்ள தொடை மற்றும் பிட்டப்பகுதியில் தடவி 15 நிமிடம் நன்கு காய வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.

natural,buttocks,thighs,rice flour,orange peel ,இயற்கை,பிட்டம்,தொடைப்பகுதி,அரிசி மாவு,ஆரஞ்சு பழ தோல்

ஆரஞ்சு பழத்தின் தோலைப் போன்றே எலுமிச்சையும் சிட்ரஸ் பழ வகையைச் சேர்ந்தது. இப்பழத்தில் ப்ளீச்சிங் பண்புகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. சரும கருமையைப் போக்க நினைப்பவர்கள், இந்த எலுமிச்சையைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், விரைவில் வெள்ளையாக்கலாம். ஒரு பௌலில் எலுமிச்சை சாறு மற்றும் நீரை சரிசம அளவில் எடுத்துக் கொண்டு, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி கருமையாக உள்ள பகுதியில் தடவி 10-15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இப்படி அடிக்கடி செய்து வந்தால், கருமை நீங்கி சருமம் சீக்கிரம் வெள்ளையாகும்.

இந்த வழிமுறைகளை வாரத்திற்கு 4-5 முறை முயற்சிப்பதன் மூலம், விரைவில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

Tags :
|