Advertisement

முடி உதிர்வை போக்கும் எளிய இயற்கை குறிப்புகள்!

By: Monisha Tue, 20 Oct 2020 3:04:52 PM

முடி உதிர்வை போக்கும் எளிய இயற்கை குறிப்புகள்!

இன்றய காலக்கட்டத்தில் ஆண்கள், பெண்கள் சந்திக்கும் முக்கிய அழகு பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்தல் தான். முடி உதிர்வை போக்க பல்வேறு மருத்துவங்களை கையாண்டிருப்பீர்கள் எதிலும் பலன் கிடைக்கவில்லையா? இந்த எளிய இயற்கை குறிப்புகள் உங்களுக்கு நல்ல பயனைத்தரும்.

தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும்.

அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வது நிற்கும். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் வேம்பாளம் பட்டையை வாங்கிப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வந்தாலும் பலன் கிடைக்கும்.

hair loss,coconut milk,beauty,coconut oil ,முடி உதிர்வு,தேங்காய் பால்,அழகு,தேங்காய் எண்ணெய்

சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் முடி உதிர்வது நிற்கும்.

வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊறவைக்க வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரில் தலையை நன்றாக அலசிவிடவும்.

வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும். அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.

Tags :
|