Advertisement

முடி உதிர்வு பிரச்சினையை சமாளிக்க சில இயற்கை குறிப்புகள்!

By: Monisha Thu, 12 Nov 2020 3:36:57 PM

முடி உதிர்வு பிரச்சினையை சமாளிக்க சில இயற்கை குறிப்புகள்!

பெண்களின் அழகு தொடர்பான பிரச்சினைகளில் முடி உதிர்வும் ஒன்று. சூரியனின் கதிர்கள் அளவுக்கு அதிகமாக நம் மீது படும்போதும் முடி உதிர்வு பிரச்சினை அதிகமாக ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை சமாளிக்க சில இயற்கை குறிப்புகளை பார்ப்போம்.

கறிவேப்பிலை மற்றும் மருதாணி ஆகிய இரண்டையும் நன்றாக அரைத்து, மாதம் இரண்டு முறை தேய்த்து வந்தால், இளமையில் ஏற்படும் நரை மற்றும் முடி உதிர்வு போன்ற பிரச்சினையை தடுக்கலாம்.

முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து தலையில் தேய்த்து, அதை ஊற வைத்து சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இதேபோல் மாதம் 2 முறை செய்து வந்தால் கூந்தல் பளபளப்பாக இருப்பதுடன் முடி உதிர்வதும் நின்று விடும்.

hair loss,women,beauty,nature,head ,முடி உதிர்வு,பெண்கள்,அழகு,இயற்கை,தலை

வெந்தயம் மற்றும் குன்றிமணி ஆகியவற்றை பொடி செய்ய வேண்டும். அந்த பொடியை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து அந்த எண்ணெயை தினமும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வை தடுக்கலாம்.

முடி உதிர்வதை தடுக்க அயர்ன் மற்றும் விட்டமின்கள் அதிகமாக உள்ள உணவு பொருட்களை தினமும் சாப்பிட்டால் முடி உதிர்வதை தடுக்கலாம்.

தலைக்கு எண்ணெய் பசையை ஏற்படுத்துவதற்கு தினமும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அப்படி தலையில் எண்ணெய் பசை இருக்கும் பொழுது முடி உதிர்வது குறையும்.

Tags :
|
|
|