Advertisement

ஹேண்ட்ஸம்மாக வலம் வர ஆண்களுக்கான சில டிப்ஸ்!

By: Monisha Mon, 09 Nov 2020 4:34:50 PM

ஹேண்ட்ஸம்மாக வலம் வர ஆண்களுக்கான சில டிப்ஸ்!

பெண்களுக்கு இணையாக ஆண்களும் தங்களை எப்போதுமே இளமையாகவும் ஹேண்ட்சம்மாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கத் தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக இந்த பதிவில் எப்போதும் இளமையாகவும், ஹேண்ட்ஸம்மாகவும் இருப்பதற்கான சில டிப்ஸ்களை கொடுக்கப்பட்டுள்ளது.

தினமும் ஷேவிங் செய்வதால், அது உங்கள் முகத்தில் உள்ள தோலைப் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே, தினமும் ஷேவிங் செய்வதைத் தவிருங்கள்.

உங்கள் இரு கண்களுக்குக் கீழே கருமை அண்டாமல் பளபளப்பாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு 3 நாட்களுக்கு ஒரு முறை கண்களின் மேல் வெள்ளரித் துண்டுகளை சிறிது நேரம் வைத்து எடுங்கள். இது கண்களைப் பாதுகாப்பாகவும், குளுமையாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

handsome,men,beauty,face,appearance ,ஹேண்ட்ஸம்,ஆண்கள்,அழகு,முகம்,தோற்றம்

வறட்சியான சருமம் உங்களை எப்போதும் வயோதிகராகத் தான் காட்டும். அத்தகைய வறட்சியயைப் போக்க உங்கள் சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கான நல்ல மாய்ச்சுரைசர்களை உபயோகப்படுத்துங்கள்.

நீங்கள் எப்போதும் வீட்டுக்குள்ளேயே அல்லது அலுவலகத்திலேயே இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத தூசிகளும் கிருமிகளும் உங்கள் முகத்தில் வந்து உட்கார்ந்து கொள்ளும். இவற்றைக்களைய, ஒரு நாளைக்கு 4 முறை உங்கள் முகத்தைக் கழுவுங்கள். உங்கள் முகத்தில் உள்ள எண்ணெய்ப் பதத்தையும், சுருக்கங்களையும் போக்குவதற்கு இது உதவும்.

Tags :
|
|
|