Advertisement

முடி அடர்த்தியாக வளர பிரியாணி இலையை இப்படி பயன்படுத்துங்க!

By: Monisha Mon, 26 Oct 2020 09:27:52 AM

முடி அடர்த்தியாக வளர பிரியாணி இலையை இப்படி பயன்படுத்துங்க!

ஆண்களுக்கும் பெண்களுக்கும் கருமை அதிகம் கொண்ட அடர்த்தியான கூந்தல் என்றால் அலாதி பிரியம்.
இப்படி நாம் அதிகம் விரும்ப கூடிய முடி, உதிரும் போது நமக்கு கஷ்டமாகவே தோன்றும். அப்படி உதிர்ந்த முடி திரும்ப முளைக்கவும், நல்ல அடர்த்தியாகவும் மற்றும் கருமையாக வளரவும் நீங்க இந்த நீரை தலைக்கு தேய்த்தாலே போதும்.

முடியை பராமரிப்பதே நமக்கு ஒரு பெரிய கடமையாக உள்ளது. சிலருக்கு முடி சார்ந்த கவலையே அதிகம் காணப்படும். வெள்ளை முடி, பொடுகு, முடி உதிர்தல், இளநரை இவைகளே முதன்மையான பிரச்சினையாக இருக்கும்.

பிரியாணி இலையில் விட்டமின் சி, காப்பர், மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் இரும்பு சத்து போன்ற நல்ல சத்துக்கள் இருக்கிறது. முடி அடர்த்தியாக வளர பிரியாணி இலையை எப்படி பயன்படுத்துவது?

hair,density,beauty,biryani leaf,nutrients ,முடி,அடர்த்தி,அழகு,பிரியாணி இலை,சத்துக்கள்

ஒரு பாத்திரத்தில் 15 பிரியாணி இலையை இரண்டாக வெட்டி போடுங்க. இதில் ஒருகப் தண்ணீர் சேர்த்து, அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வையுங்க. இதன் பிறகு வடிகட்டி, இந்த இலையை எடுத்து மிக்சியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து எடுக்க வேண்டும்.

அரைத்து வைத்த பேஸ்டை ஒரு பவுலில் எடுத்து, தலையில் தேய்த்து 5 நிமிடம் வரை நன்றாக ஊற விட வேண்டும். இதை 1/2 மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்தால் போதும். முடி அடர்த்தியாக கருமையாக வளரும்.

அல்லது பிரியாணி இலையை கொதிக்க வைத்து வடிகட்டிய தண்ணீரை ஆறிய பிறகு எடுத்து முடியின் வேர்க்கால்களில் நன்றாக தேய்த்து விடுங்க. அரை மணிநேரம் அப்படியே ஊற விட வேண்டும். இப்படி செய்தாலும் முடி நன்றாக வளர்ச்சியடைகிறது.

Tags :
|
|