Advertisement

ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ராகவா லாரன்ஸ்!

By: Monisha Tue, 11 Aug 2020 1:50:55 PM

ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ராகவா லாரன்ஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திரையுலகில் அறிமுகமாகி 45 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தமிழ் திரையுலகமே கொண்டாடி வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் திரையுலக பயணம் 45 வருடங்கள் நிறைவு பெறுவதை அடுத்து காமன் டிபி போஸ்டரை தமிழ் திரை உலகில் உள்ள பல பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டார்கள்.

இந்த நிலையில் நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் பாதம் கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவு செய்து தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:-

superstar,rajinikanth,raghav lawrence,greetings ,சூப்பர் ஸ்டார்,ரஜினிகாந்த்,ராகவா லாரன்ஸ்,வாழ்த்து

"ரஜினிகாந்த் அவர்களின் 45 ஆண்டு கால திரையுலக சாதனைகளை தமிழ் திரையுலகமே கொண்டாடி வருகிறது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தனது கடின உழைப்பு மற்றும் எளிமையால் அவர் ஒவ்வொருவருக்கும் குருவாக இருந்து வருகிறார். அவருடைய உடல் நலத்திற்காக நான் ராகவேந்திரா சுவாமியிடம் பிரார்த்தனை செய்கிறேன். குருவே சரணம்" என்று குறிப்பிட்டுள்ளார். ராகவா லாரன்ஸின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து விரைவில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு முடிந்தபின்னர் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :