Advertisement

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

By: Monisha Wed, 09 Dec 2020 4:37:49 PM

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

இந்தியா முழுவதும் லட்சக்கணக்கானோர் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு திரையுலகை சார்ந்த பரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எஸ்பிபி உள்பட பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அதில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது நடிகர் சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவருடைய மனைவியும் நடிகையுமான ராதிகா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

actor sarathkumar,corona virus,infection,treatment,radhika ,நடிகர் சரத்குமார்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,ராதிகா

ஹைதராபாத்தில் இருக்கும் சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தற்போது மருத்துவர்களின் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சரத்குமார் விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என தான் நம்புவதாகவும் அவருடைய உடல்நலம் குறித்த தகவல்களை அவ்வப்போது தெரிவிக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராதிகாவின் இந்த டுவிட்டை அடுத்து சரத்குமார் விரைவில் கொரோனாவில் இருந்து குணமாக வேண்டும் என அவரது ரசிகர்களும் திரையுலகினரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Tags :