Advertisement

வலிமை படத்தை விரைந்து முடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அஜித்

By: Nagaraj Wed, 16 Dec 2020 9:25:40 PM

வலிமை படத்தை விரைந்து முடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அஜித்

படத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று இயக்குனர் வினோத்திற்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் அஜித். இதனால் படப்பிடிப்பு வேக, வேகமாக நடந்து வருகிறது.

கடைசியாக தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபீசில் 100 கோடி வசூல் தாண்டி சாதனை படைத்தது. அதுவரை கமர்ஷியல் படங்கள்தான் மிகப்பெரிய வசூல் அள்ளும் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்ததை அடித்து நொறுக்கிய படம்தான் நேர்கொண்ட பார்வை.

அதன்பிறகு தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விவேகம் படத்திற்கு பிறகு அதிக நாட்கள் படமாகும் அஜித் படம் வலிமை தான். ஆனால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட விடாமல் ரசிகர்களை சோதனைக்குள்ளாக்கி வருகிறார் தயாரிப்பாளர் போனி கபூர்.

strength film,release,first look poster,shooting,vibration ,
வலிமை படம், ரிலீஸ், பர்ஸ்ட் லுக் போஸ்டர், படப்பிடிப்பு, விறுவிறுப்பு

இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என தல அஜித் விரைவில் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு ரெடி செய்யுங்கள் என தெரிவித்து விட்டாராம். இதை வினோத் தயாரிப்பாளர் போனி கபூர் காதுக்கு கொண்டு சென்றுள்ளார்.

போனி கபூர் ஏப்ரல் மாதத்திற்குள் மொத்த படத்தையும் முடித்துவிட்டு மே 1ஆம் தேதி தல அஜித் பிறந்தநாளில் வலிமை படத்தை ரிலீஸ் செய்யலாம் என யோசனை கூறியுள்ளாராம். இதனால் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் வேகம் எடுத்துள்ளதாம். மேலும் வருகிற புத்தாண்டுக்கு வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கண்டிப்பாக வெளிவந்து விடும் என்கிறார்கள்.

Tags :