Advertisement

பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி ஆகும் அர்ச்சனா!

By: Monisha Thu, 15 Oct 2020 12:28:35 PM

பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி ஆகும் அர்ச்சனா!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி பத்து நாட்கள் முடிவடைந்து இன்று பதினோராவது நாள் ஆரம்பமாகிறது. இந்த நிலையில் இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற போகும் நிலையில் ஆர்ஜே அர்ச்சனா திடீரென இன்று என்ட்ரி ஆகிறார் என்பது இன்றைய முதல் புரோமோவில் இருந்து தெரிகிறது.

ஏற்கனவே அர்ச்சனா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறார் என்று செய்திகள் வெளியாகியது. அந்த வகையில் அவர் நிகழ்ச்சி தொடங்கும் முதல் நாளில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் வைல்ட் கார்ட் எண்ட்ரியில் இடம்பெறுவார் என்று கூறப்பட்டது.

big boss,wild card,archana,entry ,பிக்பாஸ்,வைல்ட் கார்ட்,அர்ச்சனா,எண்ட்ரி

அந்த வகையில் இன்று அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி ஆகும் காட்சிகளும் அவரை சக போட்டியாளர்கள் அனைவரும் வரவேற்கும் காட்சிகளும் புரமோவில் உள்ளது.

அர்ச்சனா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியே கலகலப்பாக இருக்கும் என்ற நிலையில் தற்போது அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து உள்ளதால் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :