Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பிக்பாஸ் முதல்நாள்: அறந்தாங்கி நிஷாவின் அசத்தலான ஃபெர்மான்ஸால் விறுவிறுப்பு

பிக்பாஸ் முதல்நாள்: அறந்தாங்கி நிஷாவின் அசத்தலான ஃபெர்மான்ஸால் விறுவிறுப்பு

By: Monisha Tue, 06 Oct 2020 12:49:16 PM

பிக்பாஸ் முதல்நாள்: அறந்தாங்கி நிஷாவின் அசத்தலான ஃபெர்மான்ஸால் விறுவிறுப்பு

பெரும் எதிர்பார்ப்புடன் நேற்று முன்தினம் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நாள் நிகழ்ச்சிகள் நேற்று ஒளிபரப்பப்பட்டது.

இதில் அறந்தாங்கி நிஷா முதல் நாளே அசத்தி அனைவரையும் கவர்ந்தார். ஆரம்பம் முதலே அனைத்து போட்டியாளர்களுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்த நிஷா, ஒருவரையும் விட்டு வைக்காமல் கலாய்த்தது ரசிக்கும் வகையில் இருந்தது. குறிப்பாக கேமரா முன் அவர் தனது காதலை புரபோஸ் செய்தது, பிக்பாஸ்ஸையே ஒரு கட்டத்தில் கலாய்த்தது என பார்வையாளர்களின் பாராட்டை முதல் நாளே பெற்றுவிட்டார். முந்தைய சீசனில் சாண்டியின் இடத்தை இவர் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இளம் போட்டியாளர்களுக்கு இவர் நிச்சயம் ஒரு சவாலான போட்டியாளர்தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரேகா அறிமுகமான போது அவர் இன்னொரு பாத்திமா பாபு என்றும் முதல் இரண்டு வாரங்களுக்குள் வெளியேறி விடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆச்சரியப்படும் வகையில் அறந்தாங்கி நிஷாவுக்கு இணையாக அவரும் கலாய்த்து அசத்தி வருவது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

big boss,first day,aranthangi nisha,shivani,sanam shetty ,பிக்பாஸ்,முதல்நாள்,அறந்தாங்கி நிஷா,ஷிவானி,சனம் ஷெட்டி

மேலும் ரம்யா பாண்டியன், அனிதா சம்பத், சம்யுக்தா, ஆகியோர்களும் ஜாலியான மூடில் உள்ளனர். ஆண் போட்டியாளர்களில் ரியோராஜ், பாடகர் வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர்களும் தங்கள் ஆட்டத்தை தொடங்கிவிட்டனர்.

ஷிவானி மட்டும் இன்னும் உம்மணாமூஞ்சியாக உள்ளார். இன்ஸ்டாகிராமில் அவரை கலகலப்பாகவும் சிரித்த முகத்தோடும் பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளிலேயே அவருடைய நடவடிக்கைகளைப் பார்த்து அதிருப்தி அடைந்துள்ளனர். என்னால் சீக்கிரம் மிங்கிலாக முடியாது என்று அவர் கூறியதையும் யாரும் நம்ப தயாராக இல்லை. இதன் எதிரொலியாகத்தான் அவருக்கு நேற்று நிறைய புரோக்கன் ஹார்ட் கிடைத்தது. ஆனாலும் இவர் இன்னொரு ஓவியாவா? அல்லது ஐஸ்வர்யா தத்தாவா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதுமட்டுமின்றி பிக்பாஸ் ஆதரவும் இவருக்கு அதிகம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

big boss,first day,aranthangi nisha,shivani,sanam shetty ,பிக்பாஸ்,முதல்நாள்,அறந்தாங்கி நிஷா,ஷிவானி,சனம் ஷெட்டி

சனம் ஷெட்டி கொஞ்சம் ஓவர் ஆக்சன் செய்கிறார். போட்டியாளர்களே இதனை கண்டுபிடித்துவிட்டனர். இதனால் இவர் தேறுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆஜித், கேப்ரில்லா, பாலாஜி முருகதாஸ், சோம் ஆகியோர் இனிமேல்தான் தங்கள் ஆட்டத்தை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரி எப்போதும் சீரியஸாகவே உள்ளார். மொத்தத்தில் பிக்பாஸ் முதல்நாள் நிகழ்ச்சி அறந்தாங்கி நிஷாவின் அசத்தலான ஃபெர்மான்ஸால் விறுவிறுப்பான நிகழ்ச்சியாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :