Advertisement

ஷிவானியை மடக்கி கேள்வி கேட்ட நடிகர் ஆரி!

By: Monisha Tue, 06 Oct 2020 12:49:28 PM

ஷிவானியை மடக்கி கேள்வி கேட்ட நடிகர் ஆரி!

பிக்பாஸ் வீட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருந்த நிலையில் இன்று இரண்டாவது நாளின் புரோமோ சற்றுமுன் விஜய் டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதில் எதிர்பார்த்தது போலவே ஷிவானியை மையப்படுத்தியே அனைத்து காட்சிகளும் இருந்தன.

இன்ஸ்டாகிராமில் ஷிவானிக்கு இருக்கும் ஃபாலோயர்ஸ் குறித்து பெருமையாக சோம் மற்றும் பாலாஜி முருகதாஸ் அவரை ஊக்கப்படுத்தினர். ஆனால் அதே நேரத்தில் நடிகர் ஆரி, ஷிவானியை அதே விஷயத்தை வைத்து மடக்கினார்.

big boss,shivani,actor aari,instagram,followers ,பிக்பாஸ்,ஷிவானி,நடிகர் ஆரி,இன்ஸ்டாகிராம்,ஃபாலோயர்ஸ்

'நீங்கள் தினமும் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு செய்கிறீர்கள். அதை பார்ப்பதற்கு என்ற ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறார்கள். நீங்கள் என்ன ஆகவேண்டும் என்பதற்காக இதை எல்லாம் செய்கிறார்கள்? என்று ஷிவானியை மடக்கி ஒரு கேள்வி கேட்கிறார்

இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறியபடி ஷிவானி இருக்கும் காட்சியுடன் இந்த புரமோ முடிகிறது. ஏற்கனவே நேற்றைய நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களும் ஷிவானிக்கு புரோக்கன் ஹார்ட் பதிவு செய்து அவரை கார்னர் செய்த நிலையில் தற்போது மீண்டும் அவரை கார்னர் செய்வதால் இரண்டாவது நாளிலேயே பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பை எட்டி உள்ளது.

Tags :