Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • மிக விரைவில் சந்திப்போம்... மாஸ்டர் படம் குறித்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

மிக விரைவில் சந்திப்போம்... மாஸ்டர் படம் குறித்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

By: Monisha Thu, 24 Dec 2020 8:35:35 PM

மிக விரைவில் சந்திப்போம்... மாஸ்டர் படம் குறித்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

'மாஸ்டர்' திரைப்படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது என பட குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யுஏ' சான்றிதழ் அளித்தார்கள் என்றும் செய்திகள் வெளியாகியது

'மாஸ்டர்' திரைப்படம் சென்சார் செய்யப்பட்டு விட்டதால் வெகு விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இந்த படத்தை பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்ததாகவும் செய்திகள் வெளியானது.

master,fans,delight,film crew,ua certified ,மாஸ்டர்,ரசிகர்கள்,மகிழ்ச்சி,பட குழுவினர்,யுஏ சான்றிதழ்

இந்த நிலையில் தற்போது 'மாஸ்டர்' பட குழுவினர் இந்த படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது என உறுதி செய்துள்ளனர். 'மாஸ்டர்' திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மிக விரைவில் சந்திப்போம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவர வாய்ப்பு உள்ளது. இந்த தகவலையடுத்து விஜய் ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

Tags :
|
|