Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பிக்பாஸ் கொடுத்த ஜிப்ரிஷ் மொழி டாஸ்க்; பீட்டர் விட்ட போட்டியாளர்களின் செம காமெடி

பிக்பாஸ் கொடுத்த ஜிப்ரிஷ் மொழி டாஸ்க்; பீட்டர் விட்ட போட்டியாளர்களின் செம காமெடி

By: Nagaraj Wed, 18 Nov 2020 2:29:22 PM

பிக்பாஸ் கொடுத்த ஜிப்ரிஷ் மொழி டாஸ்க்; பீட்டர் விட்ட போட்டியாளர்களின் செம காமெடி

பீட்டர் விட்டு திரிந்த போட்டியாளர்களை வைச்சு செய்து விட்டார் பிக்பாஸ் என்றுதான் கூற வேண்டும். இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சி நல்லா சுவாரஸ்யமாவே ஆரம்பித்து சென்றுக் கொண்டு இருக்கிறது.

அதிலும், குறிப்பாக நேற்றைய நிகழ்ச்சி வேற லெவல். ஆங்கிலத்தில் பீட்டர் விட்டு சுற்றிக் கொண்டு இருந்த பிக் பாஸ் போட்டியாளர்களை, ஜிப்ரிஷ் மொழியில் பேச வேண்டும் என பிக் பாஸ் கொடுத்த டாஸ்க் செம.

நேரத்தின் அருமையை போட்டியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஏகப்பட்ட சமூக நோக்கங்கள் கொண்ட ஸ்க்ரிப்ட்டை டாஸ்க்காக கொடுத்து போட்டியாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு அட்வைஸ் செய்து வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.

பிக் பாஸ் வீட்டில் நடைபெறும் சண்டைகள் எல்லாம் ரீல் சண்டைகளாக இருந்தாலும், அது மனித குலத்தின் ரியல் சண்டைகளின் பிரதிபலிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. மனிதர்களின் காழ்ப்புணர்ச்சி, கோபம், கண்ணீர், பொறாமை, புறம் பேசுதல் இவை எல்லாவற்றையும் மிக்ஸ் பண்ணிய கதம்ப சோறு தான் பிக் பாஸ் என்றால் மிகையில்லை.

big boss,jibrish language,anita,task,nisha,shivani ,பிக்பாஸ், ஜிப்ரிஷ் மொழி, அனிதா, டாஸ்க், நிஷா, ஷிவானி

தமிழ் மொழியில் பேசுவது என்றாலே பல பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தகராறு தான். சர்வ சாதாரணமாக பொது மக்களை போல அவர்கள் வாழ்விலும் ஆங்கிலம் இரண்டற கலந்து விட்டது. இந்நிலையில், ஆங்கிலத்தில் பீட்டர் விடுவதை கொஞ்ச நேரம் தடுக்க ஜிப்ரிஷ் மொழியில் பேசும் டாஸ்க்கை பிக் பாஸ் பணித்தார். போட்டியாளர்கள் ஜிப்ரிஷ் மொழி பேசும் டாஸ்க்கில் மூழ்கியே போய்விட்டார்கள். நிஷா, ஷிவானி, கேபி எல்லாம் பேசியது செம காமெடியாக நேற்றைய நிகழ்ச்சியை கொண்டு சென்றது.

கேபி ஜிப்ரிஷ் மொழியில் பேசுவதை தாண்டி பாடவும் செய்தார். பாரேன், இந்த புள்ளைக்குள்ள அத்தனை திறமை இருக்கு, ஆனால், இத்தனை நாளா கூட்டத்திற்குள் காணாமல் போயிருந்தார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

சன் டிவி செய்தி வாசிப்பாளராக சிங்கப்பெண்ணாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தவர் அனிதா சம்பத். விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முழு லூசு பெண்ணாகவே மாறியதை பார்த்து ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர். பாவம் இந்த வாரம் நீயே வெளியே போயிடும்மா என்று ரசிகர்களையே சொல்லும் அளவுக்கு அவரை நடிக்க வைத்து வருகின்றனர். இவர் எப்போதும் அடுத்தவர்களை குற்றம் சொல்வதே தனது வேலையாக கொண்டுள்ளார். இதில் கமலும் தப்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|