Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • கமலுடன் சரியான வாய்ப்புகள் அமையாததால் நடிக்கவில்லை; ஆனந்த்ராஜ் தகவல்

கமலுடன் சரியான வாய்ப்புகள் அமையாததால் நடிக்கவில்லை; ஆனந்த்ராஜ் தகவல்

By: Nagaraj Thu, 19 Nov 2020 10:45:06 PM

கமலுடன் சரியான வாய்ப்புகள் அமையாததால் நடிக்கவில்லை; ஆனந்த்ராஜ் தகவல்

'கமல் அண்ணனுடன் நடிக்க சரியான வாய்ப்புகள் அமையவில்லை. ஆனால், கண்டிப்பாக நடிப்பேன் என்று நடிகர் ஆனந்த்ராஜ் தெரிவித்துள்ளார்.

80களில் டெரர் வில்லனாக வலம் வந்தவர் ஆனந்த் ராஜ். குறிப்பாக நடிகர்களின் தங்கை கதாபாத்திரத்தை அவர் கற்பழிப்பது போல் ஒரு காட்சி கண்டிப்பாக இருக்கும். மேலும், பயமுறுத்தும் வில்லனாகவும் கலக்கியிருப்பார்.

குறிப்பாக ரஜினி, விஜயகாந்த், சத்தியராஜ் ஆகியோரின் படங்களில் கண்டிப்பாக ஆனந்தராஜ் வில்லனாக நடித்திருப்பார். ஆனால், பல வருடங்கள் ஆகியும் ஆனந்தராஜ் ஏன் கமலுடன் அவர் நடிக்கவில்லை என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

kamal,acting opportunity,anandraj,question,fans ,கமல், நடிக்கும் வாய்ப்பு, ஆனந்த்ராஜ், கேள்வி, ரசிகர்கள்

இதுபற்றி சமீபத்தில் பேட்டியளித்த ஆனந்தராஜ் 'கமல் அண்ணனுடன் நடிக்க சரியான வாய்ப்புகள் அமையவில்லை. ஆனால், கண்டிப்பாக நடிப்பேன்

சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், என் கதாபாத்திரம் வலுவாக இல்லாததால் மறுத்துவிட்டேன். அவருடன் நடிக்கும் வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன்' என கூறியுள்ளார்.

Tags :
|