Advertisement

அக்சராஹாசன் நடித்து வரும் படத்தின் டிரைலரை வெளியிடும் கமல்ஹாசன்!

By: Monisha Sat, 10 Oct 2020 10:07:01 AM

அக்சராஹாசன் நடித்து வரும் படத்தின் டிரைலரை வெளியிடும் கமல்ஹாசன்!

அக்சராஹாசன் நடித்து வரும் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' படத்தின் டிரைலரை கமல்ஹாசன் வரும் 12ஆம் தேதி வெளியிடுகிறார்.

உலக நாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன் ஏற்கனவே அமிதாப், தனுஷ் நடித்த 'ஷமிதாப்', அஜித் நடித்த 'விவேகம்', விக்ரம் நடித்த ‘'கடாரம் கொண்டான்' ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது அவர் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் பழம்பெரும் பாடகி உஷா உதுப் நடித்து வருகிறார்.

அக்சராஹாசனின் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொண்ட கதையம்சம் கொண்ட இந்த படத்தை இயக்குனர் ராஜாகிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கி வருகிறார்.

aksharahasan,film,trailer,kamalhasan,shooting ,அக்சராஹாசன்,படம்,டிரைலர்,கமல்ஹாசன்,படப்பிடிப்பு

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசரை அக்சராஹாசனின் சகோதரி நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டார். இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலரை அக்சராஹாசனின் தந்தையும் உலக நாயகன் நடிகருமான கமல்ஹாசன் வரும் 12ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|