Advertisement

விஜய் சேதுபதியின் லாபம் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ்!

By: Monisha Tue, 08 Dec 2020 4:47:22 PM

விஜய் சேதுபதியின் லாபம் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ்!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 'லாபம்' திரைப்படம் திரையரங்குகளில் முதலில் ரிலீஸாவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 'க/பெ ரணசிங்கம்' என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்த படமும் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வந்த 'லாபம்' படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

vijay sethupathi,laabam movie,theater,sruthihaasan,netflix ,விஜய் சேதுபதி,லாபம் திரைப்படம்,திரையரங்கு,ஸ்ருதிஹாசன்,நெட்பிளிக்ஸ்

ஆனால் அதே நேரத்தில் இந்த படம் திரையரங்குகளில் தான் முதலில் ரிலீஸ் ஆகும் என்றும், தியேட்டர் ரிலீசுக்கு பின்னர் இந்த படம் நெட்பிளிக்ஸில் ரிலீஸாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 'லாபம்' திரைப்படம் திரையரங்குகளில் முதலில் ரிலீஸாவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு, சாய்தன்ஷிகா, கலையரசன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை பிரபல இயக்குனர் எஸ்பி ஜனநாதன் இயக்கி உள்ளார். டி இமான் இசையில் உருவாகி இந்த படத்திற்கு ஏற்கனவே மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் நிலையில் இந்த படமும் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :