Advertisement

அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைவது எப்போது?

By: Monisha Mon, 12 Oct 2020 2:16:58 PM

அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைவது எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் போட்டியாளராக ஆர்ஜே அர்ச்சனாவும் உண்டு என்று உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளியானது. ஆனால் கடந்த ஞாயிறன்று அறிமுகம் செய்யப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்களில் அர்ச்சனா இல்லாதது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் அர்ச்சனா வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வாரம் சனம்ஷெட்டி அல்லது ஷிவானி வெளியேற அதிக வாய்ப்பு இருக்கும் நிலையில் அதற்கு பதிலாக அர்ச்சனா வைல்ட்கார்ட் எண்ட்ரியாக உள்ளே நுழைய இருப்பதாக கூறப்படுகிறது.

அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைவது எலிமினேஷனுக்கு பின்னரா அல்லது அதற்கு முன்னதாகவா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்து உள்ள நிலையில் அர்ச்சனாவின் வருகை இந்த நிகழ்ச்சியை இன்னும் விறுவிறுப்பாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :