Advertisement

பிக்பாஸ் வின்னர் யாராக இருக்கலாம்; சம்யுக்தாவின் அதிரடி பதில்

By: Nagaraj Thu, 03 Dec 2020 3:59:29 PM

பிக்பாஸ் வின்னர் யாராக இருக்கலாம்; சம்யுக்தாவின் அதிரடி பதில்

பிக்பாஸ் வின்னர் யாராக இருக்கலாம் என்பதற்கு சம்யுக்தா அளித்துள்ள பதில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாலும் தனது கருத்துக்களை வேண்டிய இடத்தில் சரியாக பதிவிடுவதால் அனைவரது கவனத்தையும் பெற்றார் சம்யுக்தா.

கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட அனிதா, பிக்பாஸ் கொடுத்த பாஸை பெற்றதை அடுத்து அவர் சம்யுக்தாவை நாமினேட் செய்தார். 50 நாட்கள் கடந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சம்யுக்தா வெளியேறினார்.

samyukta,ari,ajith,ramya,big boss winner ,
சம்யுக்தா, ஆரி, ஆஜித், ரம்யா, பிக்பாஸ் வின்னர்

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் சம்யுக்தா முதல் முறையாக பேட்டி அளித்துள்ளார். அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் சரியாக விளையாடினாலும் கடைசியில் ஜெயிக்க முடியாது என்று யாரை நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டபோது, அவர் 'ஆஜித் சரியாக விளையாடுகிறார், ஆனால் அவர் ஜெயிப்பது கொஞ்சம் கஷ்டம்".

"ரம்யாவும் சரியாக விளையாடுகிறார், அவருக்கும் ஜெயிக்க அதிக வாய்ப்பு உள்ளது" என்று கூறியுள்ளார். மேலும் ஆரி உடனான பிரச்சனை பற்றிய கேள்விக்கு அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் பேசக்கூடாது எல்லாம் பேசிவிடடார். ஒரு பெண்ணிடம் எப்படி அப்படியெல்லாம் பேசலாம் என கூறியுள்ளார்.

ஆரி பேசியது என்ன எனவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படாதது ஏன் எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags :
|
|
|