Advertisement

பல வண்ண டிசைன்களில் புடவைக்கு ஏற்ற பிளவுஸ்!

By: Monisha Tue, 22 Dec 2020 4:05:16 PM

பல வண்ண டிசைன்களில் புடவைக்கு ஏற்ற பிளவுஸ்!

ஒரே மாதிரியான பிளவுஸ் டிசைன்ஸ் போட யாருக்கு தான் பிடிக்கும். ஒவ்வொரு புடவைக்கும் அதற்கு தகுந்த மாதிரியான பிளவுஸ் டிசைன்களில் போடத்தான் பெண்கள் விரும்புவார்கள். ஆனால் அதனை எப்படி தேர்வு செய்வது என்று குழம்பி விடுவார்கள். அவர்களுக்காக பல வண்ண டிசைன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

வலை பிளவுஸ்: இந்த பிளவுஸ்கள் வலைகள் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் பாரம்பரியமான வடிவமும் சேர்த்து அமைக்கப்படும். இதில் அதிக எம்ப்ரைண்டரிங் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த வகையான பிளவுஸ்கள் மிகவும் அழகாக இருக்கும். படர்ந்த தோள்களை உடைய பெண்கள் இதனை தேர்வு செய்யலாம்.

திருமண பல்லக்கி டிசைன்: இந்த பிளவுஸ் மூடிய கழுத்து பகுதியோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது திருமணத்திற்கு ஏற்ற ஒரு வகையாகும். மேலும் இதில் பல எம்ப்ரைடரின் டிசைன்கள் போடப்பட்டிருக்கும். இது மிகவும் அழகான பிளவுஸ் டிசைன்.

blouses,sarees,design,fashion,embroidering ,பிளவுஸ்,புடவை,டிசைன்,பேஷன்,எம்ப்ரைண்டரிங்

நகை வடிவங்கள் உள்ள பிளவுஸ்: இந்த பிளவுஸ்களில் நகைகளின் வடிவங்கள் எம்ப்ரைடரிங் செய்யப்பட்டோ அல்லது கற்களால் அலங்கரிக்கப்பட்டோ வடிவமைக்கப்படும். இவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இந்த வகை வடிவமைப்பு இன்று பிரபலமாகி வருகின்றது. நீண்ட கழுத்து உடைய பெண்கள் இதனை தேர்வு செய்யலாம்

அழகிய கற்கள் வேலைபாடுகள் இருக்கும் பிளவுஸ்: இந்த வகை பிளவுஸ்களில் பல நிறங்களிலான கற்கள் பதிக்கப்பட்டு அலங்கரிக்கப்படும். இவை பார்ப்பதற்கு ஆடம்பர தோற்றம் கொண்டவையாகவும், அழகானவையாகவும் இருக்கும். இவை படர்ந்த கழுத்து பகுதி இருக்கும் பெண்களுக்கு ஏற்றதாக இருக்கு.

கிராஸ் கட் வடிவம்: இந்த வகை பிளவுஸ்கள் மற்ற பிளவுஸ்களை விட சற்று மாறுபட்டு இருக்கும். இவை நவீன வடிவமைப்பை கொண்ட பிளவுஸ்கள், இளம் வயது பெண்கள் இந்த வடிவ பிளவுஸ்களை பெரிதும் விரும்பி அணிவார்கள்.

blouses,sarees,design,fashion,embroidering ,பிளவுஸ்,புடவை,டிசைன்,பேஷன்,எம்ப்ரைண்டரிங்

பப் கைகள் கொண்ட பிளவுஸ்: இந்த வகை பிளவுஸ்கள் பழைய டிசைனாக இருந்தாலும், இன்று இது இளம் வயது பெண்களிடையே பிரபலமாகி வருகின்றது. இவை பார்ப்பதற்கு இளமையான தோற்றத்தை தரும்.

கைகளில் அதிக வேலைபாடுகள் கொண்ட பிளவுஸ்: இந்த வகை டிசைன்களில், குறிப்பாக கை பகுதியில் அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். இவை பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். மேலும் பிளவுஸ்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறப்பான தேர்வாக இருக்கும்.

முட்டிக்கை நீளம் உள்ள பிளவுஸ்: இந்த வகை பிளவுஸ்கள் 20 -30 ஆண்டுகளுக்கு முன் அதிக பிரபலமாக இருந்தது. ஆனால், இன்று இது மீண்டும் பல பெண்களால் விரும்பப்பட்டு, மூகூர்த்த பட்டு புடவைக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டு அணியப்படுகின்றது. இது நல்ல ஆடம்பரமான தோற்றத்தை தரும்.

Tags :
|
|